Categories
மாநில செய்திகள்

இன்னும் 5 மாதங்களுக்கு… சான்சே இல்ல… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு கொரோனா பரவக் கூடும் என்பதால் ஆன்லைன் கல்வியைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |