இந்தியா இன்னும் 5 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்கும் என்று நைட் பிராங்க் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தொடர்புகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி இந்தியாவிலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் சற்று உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கோடி அதாவது 300 மில்லியன் டாலர் அல்லது அதற்கு மேல் சொத்துகோடி அதாவது 300 மில்லியன் டாலர் அல்லது அதற்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் அதிகரித்து அதாவது 11 ஆயிரத்து 198 ஆக உயரும் என்று நைட் பிராங்க் இந்தியா நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. தற்போது உலக அளவில் 5.22 லட்சம் பெரும் பணக்காரர்களும், இந்தியாவில் 6,884 பேரும் உள்ளனர். இந்தியா விரைவில் 5 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.