Categories
மாநில செய்திகள்

இன்னும் 6 கோடி பேருக்கு… தடுப்பூசி செலுத்த வேண்டும்…. சுகாதாரத்துறை தகவல்…!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் ஆறு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தினசரி ஆக்சிஜன் கையிருப்பு 989 கேஎல் அளவுக்கு உள்ளது என்று கூறிய அவர், 210 ஆக்சிஜன் மையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் 15 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |