வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் அடுத்த பாடம் மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி அதன்பிறகு அதி தீவிர புயலாக வலுப்பெறும். புயல் கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதனால் புயல் தற்போது புதுச்சேரிக்கு 370 கிமீ தொலைவிலும், சென்னைக்கு 420 கிமீ தொலைவிலும் உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் புயல் கரையை கடக்கும் வகையில் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.