Categories
தேசிய செய்திகள்

இன்னும் 6 மாதங்களுக்கு கட்டாயம்… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் ஒரு சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மேலும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் இல்லை எனவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |