தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கப்பட்டு முன் பதிவு செய்திருந்தால் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி விட்டு நிற்பது போன்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடைமுறைகள் இன்னும் 6 மாதத்திற்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படும். மேலும் ரயில் நிலையத்திற்குள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.