Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 6 மாதத்தில்….பாஜக கைகாட்டும் ஆட்சி…. இன்னோவா கார் பரிசு …!!

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே கட்சியே ஆட்சி அமைக்கும் என மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. திமுக அதிமுகவுக்கு மாற்றாக பாஜக பல்வேறு வகைகளில் செயல்பட்டு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொண்டு வருகிறது. நேரடியாக அரசியல் களத்தில் திமுகவுக்கு போட்டி பாஜகதான் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன் மாவட்ட தலைவர், கட்சி நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட தலைவர்களுக்கு பல்வேறு விதமான முக்கிய அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மாவட்டங்களிலிருந்து பிரதிநிதிகளை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பும் மாவட்ட தலைவருக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என்றும், ஆறு மாதத்தில் தமிழக அரசின் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். நாம் கையைக் காட்டும் நபர்கள் ஆட்சியில் அமர்வார். அனைவரும் ஒத்துழைப்போடு செயல்பட வேண்டும் என்ற பல்வேறு விஷயங்களை நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்.

Categories

Tech |