Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்னைக்கு எங்கேயும் போக முடியாது..! நேற்றே அலைமோதிய கூட்டம்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

திண்டுக்கல்லில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் பொருட்கள் வாங்குவதற்காக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அவர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள், மீன், இறைச்சி ஆகியவற்றை வாங்கி குளிர்பதனப்பெட்டியில் இருப்பு வைக்க தொடங்கினர்.

இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் திரளாக குவிந்தனர். மேலும் அவர்களில் பலரும் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செல்வதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறிய சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |