Categories
மாநில செய்திகள்

இன்னைக்கு சடசடவென மழை அடிச்சு ஊத்த போகுது… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று, அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |