ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசிய அவர், திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்பதை அவரே ஒத்துக்கொண்டார். ஏற்கனவே கருணாநிதி, அடுத்தது ஸ்டாலின், இப்போ உதயநிதி. இன்னைக்கு முளைச்ச உதயாநிதி நம்ம அமைச்சரை எல்லாம் கிண்டல் அடிச்சி பேசுறது.
நீ யாருன்னு தெரியும். கருணாநிதி பேரன், ஸ்டாலினுடைய மகன் என்பதால் உன்னைய பேச்சை கேட்குறாங்க. எங்களை போல் சாதாரண கிளைக்கழகத்தில் கிளை கலைகளை செயலாளராக தோன்றி ஒன்றிய பொறுப்பு, மாவட்ட பொறுப்பு, மாநில பொறுப்பு, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் அப்பறம் முதலமைச்சர் வந்து இருந்தா அந்த கஷ்டம் தெரியும்.
கஷ்டமே தெரியாம வந்து இருக்க. அதனால இளம் கன்று பயமறியாது என்பதை போல ஏதோ பேசிட்டு இருக்காரு. ஆகவே அளந்து பேசுங்க உதயநிதி அவர்களே… இந்த 3மாத காலத்துக்கு உங்களுக்கு வாய் தான். அதற்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை தமிழகத்தில் இருக்காது.
ஏன்னா அவ்வளவு பொய் பேசிட்டு இருக்கீங்க . உண்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஸ்டாலின் வாயை திறந்தாள் பொய்தான். பொய்யை தவிர வேற எதுவும் பேசலனு முடிவு பண்ணிட்டார். அவர்கள் உண்மை பேசுவது அரிது. அதனால் மக்கள் அவர்களுக்கு வாக்கு அளிப்பது அரிது .
ஆகவே இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செய்த சாதனையை எல்லாம் பட்டியலிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு திட்டத்தையும் நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என தமிழக முதல்வர் தெரிவித்தார்.