ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்ததற்கு நடிகை சிம்பு, கௌதம் மேனன் பதிலடி கொடுத்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இது திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் கௌதம் மேனன் படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் படம் பார்க்க வருபவர்கள் நன்கு தூங்கி விட்டு வாருங்கள் என கூறியிருந்தார். அவர் அப்படி சொல்லும் போதே கருகுற வாடை அடித்ததாக கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் கௌதம் மேனன் ஓவர் பைத்தியம் என தரக்குறைவாக பேசப்பட்டது. இதற்கு இணையதள வாசிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு நேற்று நடைபெற்ற பட சக்சஸ் மீட்டில் கௌதம் மேனன் மற்றும் சிம்பு பதிலடி கொடுத்துள்ளார்கள். இன்னொருத்தர் பொலப்புல மண்ணு போடுறது தான் விமர்ச்சனங்களா…. என கௌதம் மேனன் பேசினார்.
பின்பு இதுபற்றி சிம்பு கூறி உள்ளதாவது, வெந்து தணிந்தது காடு படத்தில் என்னோட உடம்பு வச்சு விமர்ச்சிப்பவர்களால் எதுவும் எழுத முடியாது. ஒரு படத்தை விமர்சனம் செய்யலாம். ஒரு படத்தை விமர்சனம் செய்யலாம். ஆனால் தனிப்பட மனிதனையும் அவனுடைய உருவத்தையும் விமர்சனம் செய்வது ரொம்ப தப்பு. என்னால எடுத்துக்க முடியும். நிறைய பேராலா எடுத்துக்க முடியாது. தனிப்பட்ட யாரையும் துன்புறுத்த வேண்டாம். இதை நான் வேண்டுகோளாக வைத்துக் கொள்வதாக சிம்பு பேசிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.