Categories
உலக செய்திகள்

இன்னொரு ஊரடங்கு சட்டம்…. வெளியான பெரும் அதிர்ச்சி செய்தி…!!

வருகிற ஆண்டு இந்த ஆண்டை விட மோசமான நிலையை சந்திக்கும் என உலக உணவு கழக தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், அதை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு சட்டத்தினால் உலக நாடுகள் பொருளாதாரத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையே இன்னும் மாறாத நிலையில், அடுத்த ஆண்டு இந்த ஆண்டை விட மோசமானதாக இருக்கும் என உலக உணவு கழக தலைவர் டேவிட் பேஸ்லி தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்படும். கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறது. இதனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்திக்கும். இன்னொருமுறை ஊரடங்கு முறை இருக்கிறது. 2020இல் இருந்த கையிருப்பு பணம் 2021 இருக்காது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |