ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல மாற்றங்கள் நமக்கு வருவது வழக்கம் தான்.அதன்படி இலவச ரேஷன் திட்டம் முதல் பென்ஷன் திட்டம் வரை பணம் தொடர்பான பல விஷயங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வார உள்ளது.
சிலிண்டர் விலை:
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது.அவ்வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிலிண்டர் விலை 1ஆம் தேதி நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த மாதமாவது சிலிண்டர் விலை குறையுமா என வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
கிரெடிட் கார்டு கட்டணம்:
கிரெடிட் கார்டு ரத்து மற்றும் கட்டடம் தொடர்பான மூன்று விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட பிறகு 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் ஓடிபி மூலமாக ஒப்புதல் பெற்ற பிறகு கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதன் பிறகு ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் ஒப்புதல் தரப்படாவிட்டால் கிரெடிட் கார்டை மூடி விட வேண்டும்.அதனைப் போலவே கார்டு வழங்கும்போது சொல்லப்பட்ட கிரெடிட் கார்டு வரம்பை வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் மாற்றம் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச ரேஷன் திட்டம்:
நாடு முழுவதும் கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.அந்தத் திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது இந்த திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்:
நாடு முழுவதும் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்ற கொள்கை கூட்டத்தில் உயர்த்திய நிலையில் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த வட்டி உயர்வு காரணமாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் உயரக்கூடும்.
தபால் நிலைய திட்டங்கள்:
ரெப்போ வட்டி உயர்த்தப்படுவதற்கு முன்னரே தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் பலவற்றின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்ரா மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட ஒரு சில திட்டங்களுக்கான வட்டி மட்டுமே தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
அடல் பென்ஷன் யோஜனா திட்டம்:
மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தின் மிக முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி செலுத்துவோர் இனி இந்த திட்டத்தின்இணைந்து பயன்பெற முடியாது எனவும் இந்த விதிமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.