நாடு முழுவதும் கடந்த 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகம், கோர்ட்கள் என ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐகோர்ட் மற்றும் அதன் கிளைகளான தார்வார், கலபுரகி ஆகியவை வழக்கம்போல் இயங்கியது.
இந்நிலையில் பெங்களூரு, தார்வார், கலபுரகி ஐகோர்ட்டுகளுக்கு கடந்த 15ஆம் தேதி வேலை பார்த்ததற்கு பதிலாக இன்று(ஆக 29) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று ஐகோர்ட் பதிவாளர் பி.முரளிதர் பை அறிவித்துள்ளார்.