திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று(ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விடுமுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இன்று விடுமுறை என்பதால் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய மே 7 ஆம் தேதி வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.