தமிழகத்தில் பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வாங்க மக்கள் இன்றுடன் வாங்காவிட்டால் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு சேர்த்து 2500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த 26ம் தேதி முதல் தொடங்கியது. இன்றுடன் டோக்கன் விநியோகம் செய்யும் பணி நிறைவடைகிறது. அதனால் டோக்கன் வாங்காத மக்கள் அனைவரும் இன்று டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி டோக்கன் வாங்காவிட்டால் முதல்வர் அறிவித்த 2500 ரூபாய் பணம் கிடைக்காது.
இதனையடுத்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் வழங்கப்படுகிறது. அதனால் டோக்கன் வாங்காத மக்கள் அனைவரும் இன்று வாங்கிக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.