Categories
மாநில செய்திகள்

இன்று(ஜூன் 7) முதல் 2 நாட்களுக்கு…. ரயில்கள் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

அரக்கோணம் – சென்ட்ரல் இடையே  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் (43407) கடம்பத்தூருடன் நிறுத்தப்படும். அதன்பிறகு சென்ட்ரலில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் திருவள்ளூருடன் நிறுத்தம் செய்யப்படும். அதனைப்போலவே சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் கடம்பத்தூரில் நிறுத்தம் செய்யப்படும்.

சென்ட்ரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் திருத்தணியுடன் நிறுத்தம் செய்யப்படும்.மேலும் சென்ட்ரலில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்ட அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் (43413) கடம்பத்தூருடன் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு இந்த ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |