ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய விதிமுறைகள் அமல் படுத்துவது வழக்கம் தான். விலை உயர்வு, சம்பளம், செலவு மற்றும் வருமானம்,முதலீடு எட நம்மை நேரடியாக பாதிக்க கூடிய விஷயங்களில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அவ்வகையில் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேஸ் சிலிண்டர்:
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் இந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு:
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 என மத்திய அரசு அறிவித்தது. அதனால் இன்று முதல் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் குறைப்பு:
ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய ஊதிய விதிகள் அமல்படுத்தப்படுகிறது. அந்த விதிகள் அனைத்தும் அமலுக்கு வந்தால் ஊழியர்களின் சம்பளம் குறையும். ஆனால் பிஎஃப் பங்களிப்பு தொகை உயரும்.அது மட்டுமல்லாமல் தினமும் 12 மணி நேரம் வேலை செய்வோருக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது.
ஏசி விலை:
ஏசிகளுக்கான ரேட்டிங் விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. அதன்படி 5 ஸ்டார் ஏசிகள் இனி நான்கு ஸ்டார் ஏசிகளாக கருதப்படுகிறது. அதனால் ஏசி விலையை நிறுவனங்கள் 10 சதவீதம் வரை உயர்த்த கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை:
நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு இன்று முதல் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதலால் இனி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும், சேகரிப்பதற்கும், வினியோகம் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
கிரிப்டோ கரென்சி வரி:
ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கும் ஒரு சதவீதம் TDS பசுவைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையால் ஏதாவது உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் 1% TDS செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தபால் நிலைய சேமிப்பு திட்டம்:
போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் இன்று முதல் அபரிதமான வருமானத்தை தர உள்ளது. அதாவது இன்று முதல் மத்திய அரசு தனது PPF மற்றும் சுகன்யா சம்ரிதி போன்ற சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு காலாண்டு தொடங்குவதற்கு முன்பும் சேமிப்புத் திட்டங்களில் வட்டி வீதங்களை மதிப்பாய்வு செய்து மத்திய நிதியமைச்சகம் அறிவிக்கும். அதன்படி வருகின்ற ஜூலை 1 முதல் அரசின் சேமிப்பும் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளது.
வாகனங்கள் விலை உயர்வு:
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்கள் விலை 3,000 ரூபாய் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. கமாடிட்டி விலை உயர்வு,பணவீக்கம் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களில் மாடலுக்கு தகுந்தாற்போல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம்,உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணங்களால் வாகனங்கள் விலை 3,000 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது .
டிடிஎஸ் எனப்படும் மூல வரி பிடித்தம்
டிடிஎஸ் எனப்படும் மூல வரி பிடித்தம் தொடர்பான புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக வருமான வரி சட்டத்தின் புதிதாக ‘194- ஆர்’ என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும் 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட இலவச மாதிரி மருந்துகளுக்கு மூல வரி பிடித்தம் செய்யப்படும். இதனைப் போலவே இலவச பயண டிக்கெட் மற்றும் சமூக ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரம் 20 ஆயிரம் ரூபாயை தாண்டும் பட்சத்தில் மூல வரி பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது