Categories
தேசிய செய்திகள்

இன்றுடன் முடிவடையும் பதவிக்காலம்…… நாட்டு மக்களுடன் இன்று உரையாற்றுகிறார் ராம்நாத் கோவிந்த்….!!!

நாட்டின் 14வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ளது.

நாட்டின் 14 வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நாட்டின் 15 வது ஜனாதிபதியாக அவர் நாளை பதவி ஏற்க உள்ளார். புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்முக்கு வழிவிட்டு மாளிகையில் இருந்து ராம்நாத் கோவிந்த் இன்று வெளியேறுகிறார். இந்நிலையில் நாட்டு மக்களிடையே அவர் இன்று உரையாற்ற உள்ளார். இன்று இரவு 7:00 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக இவர் உரையாற்ற உள்ளார். அவர் பதவி காலம், தாம் வகித்து வந்த பொறுப்புகள், தான் கடந்து வந்த பாதை என உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவரிப்பார் என தெரிய வருகிறது.

Categories

Tech |