மும்பையில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமல்லாமல் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகப் பட்டுள்ளது.சாலைகளில் இரு சக்கரங்கள் அதிகம் விபத்துக்குள்ளாவது போலவே கார்களும் அதிக விபத்துக்களை சந்திக்கின்றன.காரில் பயணிப்பவர்களில் ஓட்டுநர் மட்டுமே பெரும்பாலும் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணைந்து வரும் நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் கார்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்த அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.அதன் பிறகு மும்பையில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமல்லாமல் பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 194 கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.