Categories
தேசிய செய்திகள்

இன்று(பிப்-7) முதல் பள்ளிகள் இயங்க அனுமதி…. முழு நேரமும் செயல்படும்…. வெளியான அறிவிப்பு…!!!!

கொரோனா  பரவல் நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில் புனே மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா 3-ஆம் அலையின்  தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர். அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டன.

இதனையடுத்து மகராஷ்டிரா மாநிலத்தில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவலை தொடர்ந்து  ஓமிக்ரான் தொற்றால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் மும்பை உட்பட அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் உட்பட கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.

ஆனால் புனே மாவட்டத்தில் மட்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையிலும் மற்றும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை முழு நேரமும் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 7  (இன்று) முதல் அனைத்து வகுப்புகளும் முழு நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடமாடும் வேன்கள் மூலம் பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி போட திட்டமிட்டிருப்பதாகவும்  முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |