சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை பயணிகள் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் நேரடி மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து பணிகளும் முடிவுற்றது. மேலும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததன் பெயரில் இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு இயக்கப்படுகிறது.
இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சேவையைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.