Categories
மாநில செய்திகள்

இன்று(மார்ச் 18) உள்ளூர் விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

பங்குனி மாத பவுர்ணமியும்,  உத்திரம் நட்சத்திரமும்  ஒன்றாக சேர்ந்து வரும் நாளையே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற இன்று  (மார்ச் 18)ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி 10 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து கோவில்களிலும் உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விடுகிறார்கள்.

10 வது நாள்  முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் உத்தரவிட்டிருக்கிறார். முக்கிய தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த  உள்ளூர் விடுமுறை பொருந்தாது. மேலும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 26ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இதேபோல் பரமகுடி, குயவன்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. திருவிழாவில் வெளியூர்களில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

அதனால் பொதுமக்களின் நலன் கருதி இன்று  தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்  என இந்து முன்னணி அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. மேலும் குமரி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர தினத்தன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து வேறு சில மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Categories

Tech |