தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு நேற்று அனைவருக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீபாவளிக்கு மறு நாளான இன்று (நவம்பர் 5 ஆம் தேதி) வெள்ளியன்றும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் இன்று அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நவம்பர் 5ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 20ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி தீபாவளியையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.