தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 10 வரை கனமழையும், 16ஆம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, குமரி மாவட்டங்களில், நாளை கோவை, தேனி, குமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 16ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழையும், பிற இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.