கேரளாவில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் இன்று நாளை என இரண்டு நாட்களுக்கு இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் மதியம் 2 மணி தொடங்கி 10 மணி வரை மின்னல் அதிகமாக இருக்கக்கூடும் என கூறியுள்ளது.
அதன்படி கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு இன்று கனமழைகான எச்சரிக்கையும் கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எதிர்பார்க்கப்படும் இந்த மாவட்டங்களில் 64 மில்லி மீட்டர் முதல் 115 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.