புதுச்சேரியில் இன்று அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாசிமக திருவிழாவையொட்டி அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.