கர்நாடகாவில் இருந்து திருச்சி,மதுரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்தது. அவ்வகையில் ஹுப்ளி சந்திப்பு முதல் ராமேஸ்வரம் வரை சனிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. அதனைப் போலவே ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.
இன்று முதல் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு வாரம் தோறும் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் ராமநாதபுரம் வழியாக மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் மற்றும் ஹப்லி வாராந்திர சிறப்பு கட்டண அறையில் ராமேஸ்வரத்தில் இருந்து இன்று முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில்களில் குளிர்சாதன இரண்டடுக்கு வசதி பெட்டி ஒன்று, மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் குளிர்சாதனத்துடன் 3, ஒன்பது இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்,ஐந்து இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.