Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம்…. சேலம் மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் வரும் 27 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திட சிறப்பு முகாம்கள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |