Categories
ஆன்மிகம்

இன்று ஆடி அமாவாசை…. இறந்தவர்களுக்கு தர்ப்பணம் ஏன்?….. இதோ விரிவான விளக்கம்…!!!!

அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தட்சிணாயன துவக்க காலத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு காலையிலேயே துவங்கி விட வேண்டும். அதன்படி ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அது எதற்கு என்றால், தற்பணம் என்பதற்கு திருப்தி என்பது பொருள். நீரை இறந்தவர்களுக்கு வழங்கி திருப்திப்படுத்துவது ஆகும்.

எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் செய்வது அம்மாவாசை அல்லது திதி நாட்களில் செய்வார்கள். அப்படி செய்தால் அந்த நாளன்று இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி நமக்கு அவர்கள் ஆசி வழங்குவார்கள் என்று நம்பப்படுகின்றது. சந்திரனும் சூரியனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாள்தான் அமாவாசை. அந்த நாளன்று ஒவ்வொருவரும் வீட்டின் வாசலில் எள் கலந்த தண்ணீர் வைத்தால் முன்னோர்கள் வந்து பசியை தீர்த்துக் கொள்வார்கள். ஆனால் இதனை செய்ய தவறினால் அது தோஷமாக மாறி விடும்.

அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து முடித்ததற்கு பிறகு தான் , வீட்டில் பிற காரியங்கள் , பூஜைகள் எல்லாம் செய்ய  வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரது நன்மைக்காகத்தான் இந்த தர்ப்பணம் செய்யப்படுகிறது. ஒரு வருடத்தில் 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள். 96 நாட்கள்தான் மிக மிக உத்தமமான நாட்கள் தாய், தந்தையரின் திதி நாட்கள் அன்றும் தர்ப்பணம் செய்யலாம்.

மேலும் திதி கொடுக்கும் போது பெயர் சொல்வதற்கு காரணம், ஒரே நாளில் பலருக்கு திதி கொடுப்பர். அது சரியாக முன்னோர்களுக்கு போய் சேருமோ என்று பலரும் எண்ணுவர்கள். துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு திதி செய்யும் நாட்கள் மிகவும் புண்ணியங்கள் தரும். எனவே இந்த தர்ப்பணம் மிகவும் முக்கியம்.

Categories

Tech |