நாடு முழுவதும் ரஷ்யா- உக்ரைன் போருக்கு பிறகு எரிபொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து டெல்லியில் ஆட்டோ, மினிபஸ், டாக்ஸி ஓட்டுனர்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். வரையறுக்கப்பட்ட பயண கட்டணங்களை உயர்த்துவது இயற்கை எரிவாயு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் டெல்லியில் இன்று ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.