சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து சென்னை முழுவதும் மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் இன்று குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரம் பகுதிகளில் இன்று மின்தடை வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பல்லாவரம் சாலை, அண்ணா தெரு, கடப்பேரி, நேரு தெரு, இந்திரா காந்தி சாலை, ஒலிம்பியா டவர்ஸ், மா. கோயில் தெரு, சிட்லம்பாக்கம், 2,3 ஆம் பிரதான தெரு, பெரியார் தெரு (1-7 குறுக்கு தெருக்கள்), நீதிபதி காலனி, பால விநாயகர் கோயில் தெரு, ஐயப்பா தெரு, மீனாட்சி தெரு, SBI காலனி, காந்தி தெரு (1,2 குறுக்கு தெரு) மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணி முடிந்த பிறகு மாலை 4 மணிக்கு மின் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.