இந்த வருடத்தின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் இன்று நிகழ இருப்பதால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்த வருடத்தின் கடைசி கிரகணம் மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் இரவில் நடைபெறுவதால் இதனை நம்மால் பார்க்க முடியாது. இந்த முழு சூரிய கிரகணம் தென்னாப்பிரிக்காவில் முழுமையாக தெரியும். சிலி, அர்ஜென்டைனா, தென் மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும். ஆனால் இந்தியாவில் மட்டும் இதனை பார்க்க இயலாது.
இதனையடுத்து சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகள் மற்ற நாடுகளில் செய்யப்பட்டு வருகின்றன. அங்குள்ள மக்கள் அனைவரும் இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.