தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வானிலை தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக டிசம்பர் 9ஆம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 10ஆம் தேதி தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.