Categories
தேசிய செய்திகள் வானிலை

“இன்று இந்த மாநிலத்திற்கு ரெட் அலார்ட்”…… இந்திய வானிலை எச்சரிக்கை….!!!!

மும்பையில் நான்கு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மும்பையில் கடந்த மாதம் முதல் பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் மும்பையில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று ஐந்தாவது நாளாக பலத்த மழை பெய்து வருகின்றது. தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள நகரங்களில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பை, தானே, பால்கர், ராய்க்காட் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த மாவட்டங்களில் இன்று மிக மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. இதே போல மும்பையில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |