தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிர முடிந்துள்ள நிலையில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும் கோவை, விருதுநகர், நாமக்கல், மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,தென்காசி மற்றும் வெள்ளை ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது m