தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரியில் மிக கனமழையும், திண்டுக்கல், ஈரோடு, நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.