அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்த சூழலில் இன்று பொதுக்குழு கூடியது. ஆனால் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வில்லை. 50 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாதது இதுவே முதல்முறை ஆகும். கடைசியில் பெரும் சலசலப்பு மற்றும் குழப்பத்தோடும் பொதுக்குழு முடிவடைந்தது.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று இரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார். இரவு 9 மணியளவில் ஓபிஎஸ், ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.