இன்று இரவு முதல்வர் எடப்பாடி அமித்ஷாவை நேரில் சந்தித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து சசிகலா விடுதலை அதிமுக ஆட்சியில் மாற்றத்தை ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பின்னர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதி உதவி தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வர் அளிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசும் இபிஎஸ் தமிழக அரசியல் சூழ்நிலை, கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.