Categories
ஆன்மிகம் கோவில்கள்

இன்று இரவு முதல் நிறுத்தம்… திருப்பதியில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அளவுகடந்த கூட்டம் வர வாய்ப்பு உள்ளதாக கருதி, இலவச டோக்கன் வினியோகம் இன்று இரவு முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் இலவச சட்ட உதவிகள் வழங்கப்படும். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பரமபத வாசலை திறந்து வைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் தற்போது திருப்பதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Categories

Tech |