முதுநிலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்றும், முதுகலை நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் மாணவர்கள் தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் கட்டணம் செலுத்த இன்று இரவு 11.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இனி மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.