இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு என முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.
இந்த அறிவிப்பானது இன்று இரவு 10 மணி முதல் அமலுக்கு வர உள்ளது. சென்னையில் பல முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் இரவு 10 மணிக்கு மேல் மூடப்பட உள்ளது. காவல்துறையினர் கண்காணிப்பின் கீழுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. எனவே மக்கள் அனைவரும் இரவு 10 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.