Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் விவசாய போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இன்று இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேதான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் அனைவரும் தங்கள் கோரிக்கையை முன் வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்திய போது போலீசார் கடுமையாக விவசாயிகளை தாக்கினர். அப்போது விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் டெல்லி முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விவசாய போராட்டம் நடைபெறும் காசிப்பூர், சிங்கு, திக்ரிஆகிய பகுதிகளில் இன்று இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு வரை இணையதள சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு கருதி இணையதள சேவை நிறுத்தம் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

Categories

Tech |