தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி போன்ற மாவட்டங்களுக்கு அதிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் இன்று நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 24ஆம் தேதி(இன்று) புயலாக வலுப்பெறகூடும். பின் 25 ஆம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும் என எச்சரித்து இருக்கிறது.