Categories
வரலாற்றில் இன்று

இன்று உலக இட்லி தினம்….”இட்லி குறித்து சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோமா”…? வாங்க..!!

இன்று உலக இட்லி தினம்; நாம் தினமும் சாப்பிடும் இட்லியை பற்றி பல சுவாரசியமாக தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

தென்னிந்தியாவில் தினமும் அனைவரது வீட்டிலும் சமைக்கப்படும் இட்லி இந்தியாவில் தோன்றிய உணவே இல்லை. இந்தோனேஷியா தான் இட்லியின் பூர்வீகம். இன்று உலக இட்லி தினம் கொண்டாடப்படுவதன் காரணம் தெரியுமா? 2015ம் ஆண்டில் இருந்து நாம் மார்ச் 30ம் தேதியை உலக இட்லி தினமாக கொண்டாடுகிறோம்.

கோவையை பூர்விகமாகக் கொண்ட இனியவன் என்பவர்தான் இட்லி தினம் கொண்டாட காரணமானவர். மல்லிப்பூ இட்லியின் நிறுவனரான இவர், இட்லி செய்வதில் கின்னஸ் சாதனை படைத்தவர். 124 கிலோவில் இட்லி செய்ததற்காக இவர் கின்னசில் இடம்பெற்றார். மேலும் 2000 வகையான இட்லிக்களை உருவாக்கிய பெருமையும் இவரையே சேரும்.

உலக சுகாதார அமைப்பு, அதிக உட்டச்சத்து கொண்ட உணவுகளில் இட்லியையும் சேர்த்துள்ளது. இட்லியில் புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட் என அனைத்தும் உள்ளது. இது வேகவைத்த உணவு என்பதாலும் சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியாமாகவும் எளிதில் ஜீரனமாகும் என்பதாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது.

Categories

Tech |