உலகம் முழுவதும் சிட்டுகுருவிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவை இனத்தை சேர்ந்த உயிரினம். இந்தியாவில் இவை வீட்டு குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவி மட்டுமே. ஒரு 15 வருடங்கள் முன்பு ஒவ்வொரு வீடுகளிலும் அல்லது வீடுகளின் அருகில் இருக்கும் மரங்களிலும் சிட்டுக்குருவிகளின் கூட்டை அதிகமாக பார்க்க முடியும்.
கிராமப்புறங்களில் வீட்டுக்கு வெளியே கால வைத்திருக்கும் அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை வேட்டையாடி நம் பாட்டி தாத்தாகளிடம் திட்டு வாங்கும் இந்தச் சிட்டுக்குருவிகள் இன்று அழிந்து வரும் பறவை இனமாக உள்ளது. உலக சிட்டுக்குருவி தினம் ஆன இன்று உறுதி ஏற்போம்.