Categories
தேசிய செய்திகள்

இன்று உலக பிரியாணி தினம்… பிரியாணி வாங்க ஒன்றரை கிலோ மீட்டர்… கடையில் கூடிய கூட்டம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பிரியாணி தினத்தை முன்னிட்டு ஒரு கடையில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு வரிசையில் நின்று மக்கள் பிரியாணி வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

பெங்களூர் அருகே இருக்கின்ற ஹோஸ்கேட் என்ற நகரில் ஆனந்தம் பிரியாணி கடை இருக்கின்றது. அப்பகுதியில் மிகவும் பிரபலமான பிரியாணி கடை அது. அந்த கடையில் தயார் செய்யப்படும் பிரியாணி மிகுந்த சுவை என்பதால் அங்கு எப்போதும் பெரும் கூட்டம் கூடுவது வழக்கம்.மக்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக வாரத்தின் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதிகாலையில் தொடங்கும் பிரியாணி விற்பனை சில மணி நேரத்திலேயே முடிந்துவிடுகிறது.இன்று விடுமுறை தினம் மட்டுமல்லாமல் உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது.

அதனால் அந்த கடையில் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது.மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பிரியாணி வாங்க நிற்கத் தொடங்கினர். நேரம் ஆகஆக கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு வரிசை நீண்டு சென்றது. இதுபற்றி அந்தக்கடையின் உரிமையாளர் கூறும்போது, “நாங்கள் 22 வருடங்களாக கடை நடத்தி கொண்டு இருக்கிறோம். தினம் தோறும் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம்.

மேலும் வாரத்தின் இறுதி நாட்களில்,விடுமுறை நாட்களில் அதிக அளவில் பிரியாணி விற்பனை செய்யப்படும்.எங்கள் கடையில் ரசாயன பொருட்கள் சேர்க்காமல் செயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்ட பிரியாணி செய்வதால் மக்கள் அதனை விரும்புகிறார்கள்”என்று அவர் கூறியுள்ளார்.இன்று அதிகாலை திரண்ட மக்கள் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

 

Categories

Tech |