Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்று உள்ளூர் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை சற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதன் காரணமாக மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி ப னிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பனிமய மாதா கோவிலில் பக்தர்கள் கலந்து கொள்ளும் சப்பர பவனி நடைபெறாது என்றும், பக்தர்கள் இன்றி ஆராதனை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |