தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-5 ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை இன்று முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30,000 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த கல்வியாண்டு முதல் 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை கெண்டிருப்பதை உறுதி செய்யவும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கல்வித்துறை கொண்டுவந்துள்ளது. விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
திருவள்ளுா், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். மேலும் இந்த திட்டம் தொடா்பான வீடியோ, கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிடுகிறாா். ஆசிாியா் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணம், புத்தகங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சா் வழங்குகிறாா்.