மேற்கு வங்கத்தில் நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ள தான் நேரடியாக வரமுடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்து உள்ளார். காணொலி காட்சியின் மூலம் பிரதமர் பேசியதாவது, இன்று மேற்கு வங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் நேரில் வர திட்டமிடப்பட்டு இருந்தேன்.
எனினும் சில சொந்த வேலைகள் காரணமாக என்னால் நேரடியாக வர முடியாமல் போனதற்கு மேற்கு வங்கத்திடமும் மாநில மக்களிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை இறந்தார். அவருக்கு இறுதிச்சடங்குகளை செய்துவிட்டு, சில மணி நேரங்களில் மேற்கு வங்கத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் காணொலி காட்சி மூலம் பிரதமர் பங்கேற்று, நிறைவுற்ற பல திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.